விஜய்யின் கெரியரில் மிக முக்கிய ஹிட் படங்களை பட்டியலிட்டால் அதில் பூவே உனக்காக படத்தின் பெயர் நிச்சயம் இருக்கும்.

1996 பிப்ரவரி 15ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் தொடர்ந்து நல்ல வசூலை குவித்தது. இன்றோடு பூவே உனக்காக ரிலீஸ் ஆகி 30 வருடங்கள் ஆகிறது.

30 வருடங்கள் நிறைவு செய்த பூவே உனக்காக.. அப்போதே வசூல் இத்தனை கோடியா? | Poove Unakkaga Completes 30 Years

வசூல்

கிளைமாக்சில் விஜய் பேசும் வசனம் தற்போதும் ரசிகர்களை கவர்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. “தோல்வி அடையுறதுக்கு காதல்-ன்றது ஒன்னும் பரீட்சை இல்லீங்க, அது ஒரு feeling. அது ஒரு தடவ வந்துடுச்சுனா மறுபடி மறுபடியும் மாத்திட்டு இருக்க முடியாது.”

“காதல் செடியில் பூக்கும் பூ மாதிரி, அது ஒருமுறை உதிர்ந்தால் அவ்ளோ தான். மறுபடியும் எடுத்து ஒட்ட வைக்க முடியாது. அது மாதிரி தான் என் காதலும்..” என விஜய் தன் ஒருதலை காதல் பற்றி பேசி இருக்கும் வசனம் ரசிகர்களை ஈர்த்த ஒன்று.